January 2022 - ஆரோக்கியம்

Friday, 28 January 2022

அதிக அளவு இரும்பு சத்தும் கால்சியமும் நிறைந்து காணப்படும் கருப்பட்டி!!

January 28, 2022 0
அதிக அளவு இரும்பு சத்தும் கால்சியமும் நிறைந்து காணப்படும் கருப்பட்டி!!
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாம் கருப்பட்டியை பயன்படுத்திவந்தாலே நமது பாதி நோய்களுக்கு தீர்வு காணலாம்.

நல்ல தரமான கருப்பட்டி என்றால் நீரில் போட்டவுடன் கரையாது, அவை கரைவதற்கு சுமார் ஒருமணி நேரமாவது ஆகும், ஆனால் போலி கருப்பட்டியானது நீரில் போட்டதுமே விரைவில் கரைந்துவிடும்,

கருப்பட்டியை நாக்கில் வைத்ததுமே அதன் இனிப்பு சுவை பதப்படுத்தப்பட்ட நீரின் தன்மையை காட்டும் ஆனால் போலி கருப்பட்டி அதிக இனிப்பு சுவையை காட்டும். மாவாக இருப்பது நல்ல கருப்பட்டி ஆகும்.

பருவம் அடைந்த பெண்களுக்கு,கர்ப்பிணி பெண்களுக்கும் அந்த காலத்தில் கருப்பட்டியை அதிக அளவுக்கு கொடுப்பது வழக்கம், ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்தும் காணப்படுகிறது.மேலும் உடலை ஒரு கட்டுக்கோப்புடனும் வைக்க உதவுகிறது.

கைக்குத்தல் அரிசியுடன் அவர்கள் கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டு வர அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினையை சரிசெய்து உடம்பில் இன்சுலினை சுரக்கச்செய்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.

குழந்தைகளுக்கு பாலுடன் சர்க்கரையை சேர்க்காமல் கருப்பட்டியை சேர்த்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொடுக்கிறது.

கருப்பட்டியில் அதிக அளவுக்கு இரும்பு சத்தும், கால்சியமும் உள்ளது, இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Thursday, 27 January 2022

அன்றாட உணவில் கம்பை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!

January 27, 2022 0
அன்றாட உணவில் கம்பை சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!
நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர்.

காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வரும் நமக்கு நோய்களும் பெருகிவிட்டது என்றே கூறவேண்டும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.
உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சி காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு
கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப் புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

Tuesday, 25 January 2022

குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் திராட்சை பழம் !!

January 25, 2022 0
குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் திராட்சை பழம் !!
திராட்சைப் பழத்துடன் சீமை அத்திப் பழத்தையும் கலந்து வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் ஓரளவு கொதிக்க வைத்து கொஞ்சம் இடையில் பருகிவர கண்வலி குணமாகும்.

குடல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தவும். இது சம்பந்தப்பட்ட தொல்லைகளைப் போக்கும் நன்கு பசி எடுக்கவும். சிறுநீரக கோளாறுகளைப் போக்கவும். திராட்சைப் பழம் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

புற்றுநோயை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றலையும் இந்த பழம் பெற்று சிறப்படைகிறது. தொன்டை சம்மந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும்.

முதுமையை தவிர்த்து நோய் எதிர்ப்பாற்றலை உண்டு பண்ணவும், ஜீரண சக்தியை உண்டு பண்ணவும் பன்னீர் திராட்சை பழம் நல்ல மருந்தாகிறது. திராட்சை பழம் கிடைக்கும் காலத்தில் தினந்தோறும் இப்பழத்தை உண்டு வரவேண்டும். இவ்விதம் உட்கொண்டு வந்தால் உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இன்றி வாழலாம்.

மலச்சிக்கலைப் போக்கவும் இது கை கண்ட மருந்தாகும். எனவே திராட்சைப் பழத்தை உண்டு மலச்சிக்கலையும் போக்கிக் கொள்ளலாம்.

கருத்தரிக்கும் பெண்கள் 6 மாதத்தில் இருந்தே தினசரி குறைந்தது 20 திராட்சைப்பழம் ஆவது உட்கொள்ளவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பிரசவத்தின் போது வலி குறைவதுடன் சுகமான பிரசவம் நடைபெறும்.

பன்னீர் திராட்சை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாவதுடன் கண் பார்வை தெளிவுபெறும்.

Monday, 24 January 2022

உடல் சூட்டை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வெங்காயம்.!

January 24, 2022 0
உடல் சூட்டை குறைத்து உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வெங்காயம்.!
சிறுநீர்த்தாரை தொற்று உள்ளவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.

முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.

உடல் சூட்டைக் குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சாப்பிடலாம். உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது. வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பது அவசியம்.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.

Friday, 21 January 2022

கொத்தமல்லி விதைகளில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!

January 21, 2022 0
கொத்தமல்லி விதைகளில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் !!
கொத்தமல்லி விதைகளில் லினோலிக் அமிலம் உள்ளது. இது எரிச்சலைக் குறைக்க வலி நிவாரணி பண்புகளையும் கொண்டுள்ளது.

கொத்தமல்லி விதைகளின் வழக்கமான பயன்பாடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

கொத்தமல்லி விதைகள் முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் புதிய முடியின் வளர்ச்சிக்கு வேர்களைத் தூண்டும். அவை மயிர்க்கால்களை பலப்படுத்தி, மேலும் வளர்ச்சியைத் தொடங்குகின்றன.

கொத்தமல்லி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது. அவை கல்லீரலின் ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்துகின்றன மற்றும் குடல் தருணங்களை எளிதாக்குகின்றன.

கொத்த மல்லி வீக்கம், இரைப்பை, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அனைத்து குடல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கும் நன்மை பயக்கிறது.

கொத்தமல்லி விதைகள் உணவுக்கு மிகவும் இனிமையான சுவையை சேர்க்கின்றன, மேலும் அவை செரிமான செயல்முறைக்கு உதவுகின்றன.

ஆரோக்கியமான உடல் மற்றும் அழகான சருமத்திற்கு முக்கியமானது. கொத்தமல்லி விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் மற்றும் மிக முக்கியமாக வைட்டமின் சி போன்ற பல முக்கிய வைட்டமின்கள் உள்ளன.

கொத்தமல்லி இதய நோய்க்கு காரணமான உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு போன்றவற்றை குறைக்கிறது.

Tuesday, 18 January 2022

பாகற்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

January 18, 2022 0
பாகற்காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!
பாகற்காயை ஜுஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது.

சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும் உதவுகின்றது. பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.

கல்லீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது. பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.

பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். பாகற்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

Sunday, 16 January 2022

இதய வால்வுகளில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுக்கும் நல்லெண்ணெய் !!

January 16, 2022 0
இதய வால்வுகளில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடுக்கும் நல்லெண்ணெய் !!
கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். "இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு" என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது.

இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. எள்ளில் இருந்து வடிக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய் எனப்படுகின்றது.

நல்லெண்ணெய்யில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது. அதனுடன் கால்சியம் சத்தும் நல்லெண்ணெய்யில் அதிகமுள்ளது.

உணவிற்கான எண்ணெய்யாக நல்லெண்ணெய் பலவிதங்களில் பயன்படுகிறது. எள் இலையை நெய்யில் வதக்கி கட்டிகள் மீது கட்ட அவை பழுத்து உடையும்.

நல்லெண்ணெய்யில் காரமோ, கசப்போ, இனிப்போ, துவர்ப்போ எது கலந்தாலும் இனிய சுவை தரும். எண்ணெய்க் குளியலில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது. நல்லெண்ணெய் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும் சிறப்புக் கொண்டது.

நல்லெண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் இதயம் மற்றும் இதயம் தொடர்பான தசைகள், நரம்புகள் போன்றவற்றில் அதிகளவில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தடுத்து இதய பாதிப்பு உண்டாகாமல் காக்கிறது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த 5 கிராம் அளவு எள்ளை தினமும் காலையில் உட்கொள்ளலாம். எள் பூவை நெய்யிலிட்டு வதக்கி இரவில் கண்ணின் மீது வைத்துக் கட்ட கண் பார்வை தெளிவடையும்.

எள் எண்ணெய்யை 7 நாட்களுக்கு ஒரு முறை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளித்து வர கண் சிவப்பு, கண் வலி குறையும்.

Thursday, 13 January 2022

அற்புத பலன்களை அள்ளித்தரும் எலுமிச்ச பழச்சாறு!

January 13, 2022 0
அற்புத பலன்களை அள்ளித்தரும் எலுமிச்ச பழச்சாறு!
நாவறட்சியை போக்கும் சிறந்த பானமாக எலுமிச்சை ஜூஸ் விளங்குகிறது. இது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.

கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் பலப்படும்.

எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கி உடல் நறுமணத்துடன் புத்துணர்வு பெறும். எலுமிச்சை பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளிக்க வேண்டும்.

உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உடையவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சை பழச்சாறு குடித்து வரலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை குணமாக்கும்.

சீரகத்தை எலுமிச்சை சாற்றில் ஊறவைத்து பின்பு உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல், மயக்கம் போன்றவை தீரும்.

பெண்கள் மாத மாதம் ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையால் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். அந்த சமயங்களில் அடிவயிற்று வலி அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் எலுமிச்சை கொண்டு செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்களை எடுத்து கொண்டால் மாதவிலக்கின் போது உண்டாகும் வலி குறையும்.

பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை பழச்சாறு கலந்து, காலை மற்றும் மாலை வேளைகளில் வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் குணமாகும்.

Wednesday, 12 January 2022

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் பூண்டு !!

January 12, 2022 0
பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் பூண்டு !!
பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும்.

ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும். பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும்.

வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும்.

நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும். பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

Tuesday, 11 January 2022

மருத்துவகுணம் நிறைந்த இலவங்கப் பட்டை.!

January 11, 2022 0
மருத்துவகுணம் நிறைந்த இலவங்கப் பட்டை.!
இலவங்கப் பட்டை என்பது சமையலுக்கு அதிகமாக பயனபடுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும்.

இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

இலவங்கப் பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது.

பட்டையில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. எனவே பட்டை தண்ணீர் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

உங்களுக்கு காது கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் போதும். ஏனெனில் இதிலுள்ள பொருட்கள் காதின் கேட்கும் திறனை அதிகரிக்கிறது.


நீங்கள் பல்வலியால் அவதிப்பட்டால் அதற்கு இந்த பட்டை சிறந்த பலனை கொடுக்கும். தினமும் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும்.

பட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.

பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. எனவே நச்சுகள் நமது சருமத்தில் தங்காமல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம்.

Monday, 10 January 2022

முட்டைகோஸில் உள்ள வைட்டமின்களும் அதன் அற்புத பலன்களும்.!

January 10, 2022 0
முட்டைகோஸில் உள்ள வைட்டமின்களும் அதன் அற்புத பலன்களும்.!
முட்டைகோஸில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின் பி 1,வைட்டமின் பி 2,வைட்டமின் பி 3 மற்றும் விட்டமின் D ஆகியவை அதிகம் உள்ளதால், குடல் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

முட்டைகோஸ் இல் உள்ள வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் கொண்டது. முட்டைகோஸில் இருக்கக்கூடிய வைட்டமின் கே மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

முட்டைக்கோஸை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும். மேலும் ரத்தம் உறைந்து போவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது.

அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமாகும். ஏனென்றால், இதில் அல்சரை குணப்படுத்தும் பூளுட்டோமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

முட்டைகோஸில் அதிக அளவில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கும், தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும் முட்டைக்கோசை தொடர்ந்து சேர்த்துக் கொள்வது அவசியம்.

முட்டைகோஸில் விட்டமின் ஏ சத்து கண் பார்வை கோளாறுகளை போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்க செய்யும். மேலும் முட்டைகோஸில் பீட்டாகரோட்டின் அதிக அளவில் இருப்பதால் அது கண் புரையை தடுக்கிறது.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்து போராடும் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும்.

இஞ்சி சாப்பிடுவதன் நன்மைகள்.!

January 10, 2022 0
இஞ்சி சாப்பிடுவதன் நன்மைகள்.!
உங்களின் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சி போதும்.

இது மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்க உதவுகிறது.
இஞ்சி மற்றும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு அபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, இஞ்சியை தினமும் காலையில் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது முழுவதுமாக தடுத்து விடுமாம்.

தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியோடு உங்களின் நாளை தொடங்கினால் உடல் முழுவதும் சமமான அளவில் ரத்த ஓட்டம் இருக்கும்.

நமது உடலில் சேர்ந்துள்ள நச்சு தன்மை மிக்க ஒன்று தான் இந்த கெட்ட கொலஸ்ட்ரால். இவற்றை வெளியேற்ற கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது. மேலும், வயிறு காரணமே இல்லாமல் உப்பி இருந்தால், அதையும் இது குறைத்து விடும்.

இந்த இஞ்சி பழக்கம் நமது உடலுக்கு அதிக நன்மைகளை தரும். அந்த வகையில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது குறைத்து விடும். அத்துடன் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை இஞ்சி குறைக்குமாம்.

ஒரு சின்ன வேலை செய்தாலும் உங்களின் தசை அதிக சோர்வு அடைகிறதா? இந்த பிரச்சினைக்கு தீர்வை தர கூடிய தன்மை இஞ்சியிற்கு உள்ளது.

தினமும் இஞ்சியை 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உங்களின் தசை அழற்சி, சோர்வு, தசை வலி போன்றவை நீங்கி ஆற்றலுடன் இருக்கலாம்.

இப்போதெல்லாம் குறைந்த வயதில் இருப்பவர்களில் பலருக்கு மூட்டு வலி ஏற்படுகிறது. மூட்டு பிரச்சினை இல்லாமல் இருக்க இஞ்சி உங்களுக்கு உற்ற நண்பனாக உதவும். மேலும், மூட்டில் ஏற்பட கூடிய வலியையும் இது குறைக்கும்.