உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக் கூடிய இந்த கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன.
இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.
வைட்டமின் எ, வைடமின் பி முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு மற்றும் பொட்டாசியம் ஆகிவை இதில் அதிக அளவில் உள்ளன. சாதாரண அளவில் ஒரு உருளைக்கிழங்கில் மூன்று புள்ளி இரண்டு கிராம் அளவு கூட புரதச்சத்து கிடைக்கிறது. உருளைக்கிழங்கில் கார்போஹைடிரேட் அதிகம் இருப்பதால் அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.
உருளைக்கிழங்கு தோல்லுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது.
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. பச்சை உருளக்கிழங்கை அரைத்து எடுத்து அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோள்களை சேகரித்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு இந்த கசாயத்தை அருந்தினாலும் கீழ்வாதம் குணமாகும்.
No comments:
Post a Comment