ஆப்பிளில் பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. இதிலுள்ள ஊட்டசத்துகள் சீரான உடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் என பார்போம்.
ஆப்பிளில் வைட்டமின்கள், புரோட்டின்கள் போன்று உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் உள்ள பெக்டின் என்ற கரையும் நார்சத்து, உடலில் உள்ள கேடான கொழுப்புகளை கரைக்கிறது.
ஆப்பிள் பழத்தில் உள்ள க்யூயர்சிடின் ஆண்டி-ஆக்சிடென்ட் மூளையில் உள்ள செல்கள் அழியாமல் பாதுகாத்து, நரம்பு மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், பைட்டோ நியூட்ரியண்ட் இரத்த சர்க்கரை அளவை சீர்படுத்த உதவி செய்கிறது.
மேலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி, சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்றவையும் பேருதவி செய்கிறது. இதனைப்போல, தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வர வலுவிழந்து இருக்கும் பற்கள் வலுப்பெறும். பற்களின் அழகும் அதிகரிக்கும்.
ஆப்பிளில் உள்ள நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சக்கரை அளவை சீராக வைக்கின்றன. அதே போல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆப்பிளில் அதிக அளவு கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உள்ளன. இவை உங்களின் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆப்பிள் உதவுகிறது.
ஆப்பிள் சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 நீரழிவுநோயின் அபாயத்தை குறைக்கும்.