April 2023 - ஆரோக்கியம்

Thursday, 27 April 2023

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கணுமா? இந்த காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் போதும்!

April 27, 2023 0
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கணுமா? இந்த காய்கறிகளை தினமும் சாப்பிட்டால் போதும்!

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் உணவுகள்: உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், பல நோய்கள் நம்மைத் தாக்கக்கூடும்.


கொலஸ்ட்ரால் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் மனிதர்களை ஆட்கொள்ளத் தொடங்கும். அதனால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதே சமயம், பெரும்பாலும் நாம் எண்ணெய் அளவு அதிகமாக இருக்கும் உணவையே அதிகம் உட்கொள்கிறோம். இவை சுவையாக இருப்பதால், இவற்றை நாம் அதிகம் சாப்பிடுகிறோம்.

இதன் காரணமாக இரத்த நாளங்களில் கொழுப்பு அதிகரிக்கிறது. ஆகையால்,கொலஸ்ட்ராலை குறைக்க ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க, உங்கள் உணவில் எந்தெந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இந்த காய்கறிகளை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்:

கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:

மக்கள் கத்தரிக்காயை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதன் காரணமாக கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இது மிகவும் உதவியாக இருக்கிறது. ஆகையால், கொலஸ்ட்ரால் அதிகரித்திருந்தால், கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயத்தில் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் உள்ளது

வெங்காயம் பல காய்கறிகளை சமைக்கும்போது பயன்படுகிறது. ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் நார்ச்சத்து இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்கும். உங்களுக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்:

வெண்டைக்காய் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு காயாகும். இதில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த இது உதவுகிறது. ஆகையால் அடிக்கடி வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பூண்டு சாப்பிட வேண்டும்:

பூண்டில் ஆன்டி ஹைப்பர்லிபிடெமியா உள்ளது, இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும். எனவே, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால் கண்டிப்பாக பூண்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)